கடவுள் யாருக்குச் சொந்தம்? - மரு.சிவசக்திபாலன்
- விவரங்கள்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011 22:17
- எழுத்தாளர்: மருத்துவர்.சிவசக்திபாலன்
...................மனம் ஒன்றிச் செய்யப்படும் பிரார்த்தனைகளின் மூலம் அற்புதங்கள் நிகழ்கின்றன. இதை நம்புங்கள். இது பகுத்தறிவுக்கு முரணானது அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த அனுபவங்களில் காணும் அற்புதங்களே இதனுடைய ஒரே சாட்சி. இதை வேறு வழிகளில் நிரூபிக்க இயலாது.
ஒவ்வொரு மனிதனின் மனமும் சுயமான சிந்தனைகள், தனிப்பட்ட வகையில் உருவாகும் உணர்ச்சிகள் அதன் மூலம் உண்டாகும் கொள்கைகள் கொண்டு இயங்குகிறது. எல்லோரது மனமும் ஒரே வழியில் செயல்பட்டு, ஒரே சிந்தனை, ஒரே உணர்ச்சி, ஒரே கொள்கை என்று ஆகியிருந்தால் நாம் என்றோ ஆட்டு மந்தைகளாய் ஆகியிருப்போம். அறிவு, ஆற்றல் என்ற வார்த்தைகளெல்லாம் மனித இனத்திலிருந்து அஸ்தமனமாயிருக்கும்.






