இருக்குமிடம்: Home தமிழ்க்கூடம் தமிழ் வரலாறு

உள்ளடக்கம்

 
 

பிரிவு: தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு - அறிமுகம்

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" நாம் யாவருக்கும் பரிச்சயமான வாக்கியம். உலகிலேயே முதல் மனிதர்கள் தமிழர்தான் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்று ஒரு சிலர் குழம்பி நிற்க, ஒரு சிலரோ ஆதாரங்கள் இல்லை என்று புறக்கணிக்க, தமிழைத் தன் உயிராகக்கருதும் மாந்தர்களோ நிச்சயம் தமிழ்தான் மூத்த குடி என்று திட்டவட்டமாகக் கூற, இப்படியே தமிழரின் வரலாறு பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் இருக்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் காரணம் தமிழன் தன் வரலாறைச் சரியாகப் பொறித்து வைக்காததே எனலாம்,

 

 

  • எழுத்தாளர்: பல்கலைக்கழகம்

உட்பிரிவுகள்

  • வரலாற்றுக் குறிப்புகள்

    "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில்  வாளாடு முன்தோன்றிய மூத்த குடியினர்"என்று கருதப்படும் தமிழ் மொழியே உலக முதன் மொழி என உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் கூறுவர். முன்னர் தமிழ் சம்பந்தமான அகழ்வு ஆராய்ச்சிகள் குறைவாக இருந்தது ஒரு குறைபாடாக இருப்பினும், இன்று பற்பல கல்வெட்டுக்கள், தமிழ்ப் பிராமி எழுத்துகளின் கண்டுபிடிப்புகள் உலகப் பார்வைக்கு வருகின்றன.

    இந்தப்பகுதியில் இத்தகைய சிறு குறிப்புகளைத் தொகுத்து வழங்குகின்றோம். வாழ்க தமிழ்!

  • தமிழ்ச் சங்கம் (சங்ககாலம்)

    தமிழ்ச் சங்கம் காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் தொன்மையான காலப்பகுதி கி.மு 7000 ஆண்டிலிருந்து கி.பி 300 வரை எனக் கருதப்படுகின்றது. இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் என இன்று அழைப்பர்.